கிளிநொச்சியில் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : ஒருவர் கைது..!!! - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

கிளிநொச்சியில் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : ஒருவர் கைது..!!!

கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது எட்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள 1000 ரூபா போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபர் போலி நாணயத்தாள்களை சந்தேகத்திற்கிடமான வகையில் பையில் எடுத்து சென்றமை தொடர்பில் பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து பொலிஸ் விசேட பிரிவினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுதனை அடுத்து குறித்த சந்தேகநபரை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பையில் சுமார் 5 இலட்சத்திற்கு அதிக பெறுமதி கொண்ட போலி நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் அதனை மீட்ட பொலிசார் சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும், சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த போலி நாணயத்தாள்களின் பெறுமதி தொடர்பில் கணக்கிடப்பட்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad