தடுப்பூசி ஏற்றும் முதலாம் கட்டம் மூலம் மூன்று மாதங்கள் செல்லும் வரை கொரோனா தொற்றும் வேகம் குறைவு - பேராசிரியை நீலிகா மலவிகே - News View

About Us

About Us

Breaking

Monday, May 3, 2021

தடுப்பூசி ஏற்றும் முதலாம் கட்டம் மூலம் மூன்று மாதங்கள் செல்லும் வரை கொரோனா தொற்றும் வேகம் குறைவு - பேராசிரியை நீலிகா மலவிகே

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தடுப்பூசி ஏற்றும் முதலாம் கட்டம் மூலம் மூன்று மாதங்கள் செல்லும் வரை கொரோனா வைரஸ் தொற்றும் வேகம் குறைவாகும். அத்துடன் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட முதியவர்கள் அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பரிந்துரைக்கப்பட்ட காலத்திலேயே ஏற்றிக் கொள்ள வேண்டும் என சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியை நீலிகா மலவிகே தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தடுப்பூசி ஏற்றிய முதலாவது கட்டத்தின் மூலம் மூன்று மாதங்கள் வரைக்கும் கொராேனா வைரஸ் தொற்றும் வேகம் குறைவாகும்.

ஒருவேளை கொராேனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகும். என்றாலும் அதன் முழுமையான பாதுகாப்பு கிடைப்பது அதன் இரண்டாவது கட்ட தடுப்பூசியை ஏற்றிய பின்பாகும்.

மேலும் கொவிட் தடுப்பூசி எஸ்ட்டரா செனிகா முதலாவது கட்ட தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ள முதியவர்கள் அதன் இரண்டாவது கட்ட தடுப்பூசியை பரிந்துரை செய்யப்பட்ட காலத்திலேயே பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

அத்துடன் எஸ்ட்ரா செனிகா முதலாவது கட்ட தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட 30 முதல் 40 வயது வரையானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தாலும் வயது முதிந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை காணமுடியாமல் இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment