2022 பாடசாலை தரம் 01 ற்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், ஆலோசனைகள் வெளியீடு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

2022 பாடசாலை தரம் 01 ற்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், ஆலோசனைகள் வெளியீடு

2022 இல் தரம் ஒன்றுக்கு பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் ஆலோனைகளை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பப் படிவத்தையும், ஆலோசனை கோவையினையும் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் பார்வையிட முடியும்.

விண்ணப்பங்களை அஞ்சல் ஊடாக பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைத்தல் அவசியாகும். விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன்னர் ஆலோசனை அறிவுறுத்தல்களை முழுமையாக வாசித்தல் கட்டாயமாகும்.

நிபந்தனைகள்
இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி : ஜூன் 30

2022 ஜனவரி 31ஆம் திகதிக்குள் குழந்தைக்கு 5 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும், அதனை உறுதிப்படுத்தும் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2021 ஜனவரி 31 ஆம் திகதியன்று குழந்தை 6 வயது அல்லது அதற்கு அதிக வயதை கொண்டிருக்குமாயின், குறித்த அனைத்து குறைந்தபட்ச தகுதிகளைக் கொண்டுள்ள அனைவரும் இணைக்கப்பட்ட பின்னர் மாத்திரம் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

தரம் ஒன்றிற்கு, 35 மாணவர்கள் நேர்காணல் மூலமாக தெரிவு செய்யப்படுவார்கள் என்பதோடு, மேலும் 05 பேர் சேவையிலுள்ள முப்படைகள் மற்றும் பொலிஸாரின் குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதற்கமைய ஒரு வகுப்பில் உச்சபட்சம் 40 மாணவர்கள் இணைக்கப்படுவார்கள்.

அனைத்து அரசாங்க பாடசாலகளிலும் குழந்தைகளை சேர்ப்பதற்கு பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வசதிக் கட்டணம், சேவைக் கட்டணங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்புரிமை கட்டணங்களைத் தவிர, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு மேலதிக கட்டணங்களையோ, நிதிகளையோ, வேறு பொருட்களையோ, பாடசாலைக்கோ, பாடசாலையுடன் தொடர்பான நிறுவனங்களுக்கோ, 3ஆம் தரப்பிற்கோ வழங்குவது முற்றகாக தடைசெய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளை பாடசாலையில் அனுமதித்த பின்னரும் அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளப்படக் கூடாது.

அவ்வாறு மேற்கொள்வது சட்டவிரோதமானது எனவும், அவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad