சீனாவுடனான இராணுவ கூட்டணி : மறுத்தது ரஷ்யா - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

சீனாவுடனான இராணுவ கூட்டணி : மறுத்தது ரஷ்யா

சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே இராணுவ கூட்டணி பற்றி வெளியான செய்தியை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோ நிராகரித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை விரும்புகின்றபோதும் அது இராணுவ கூட்டணிக்கு எதிரானது என்று கருதுகிறோம் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய லவ்ரோவ் தெரிவித்தார். 

அவர் இந்தியா விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே இதனை தெரிவித்தார்.

'ரஷ்ய மற்றும் சீனா உச்சிமாநாட்டில் எமது உயர் மட்ட உறவு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் கூற விரும்புகிறோம். எமது உறவு வரலாற்றில் உச்ச நிலையை எட்டியபோதும் அது இராணுவ கூட்டணி ஒன்றை நிறுவும் நோக்கம் கொண்டதல்ல' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் இதுபோன்ற இராணுவ கூட்டணிகள் பற்றி தெரியவருவதாகவும் லவ்ரொவ் தெரிவித்துள்ளார்.

'ரஷ்யா மற்றும் சீன உறவுகள் தொடர்பில் மாத்திரம் அல்ல மத்திய கிழக்கு - நோட்டோ அதேபோன்று ஆசியா - நோட்டோ போன்ற இராணுவ சார்பு கூட்டணிகள் பற்றி எமக்கு ஊகங்கள் இருக்கின்றன' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad