பைசர் தடுப்பூசி போட்டவர்கள் இடையே இதய வீக்கப் பாதிப்பு - ஆராய்ந்து வருவதாக இஸ்ரேல் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

பைசர் தடுப்பூசி போட்டவர்கள் இடையே இதய வீக்கப் பாதிப்பு - ஆராய்ந்து வருவதாக இஸ்ரேல் தெரிவிப்பு

பைசர் - பயோஎன்டெக் நிறுவனங்கள் தயாரித்த கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட சிலருக்கு இதய வீக்கம் ஏற்பட்டது குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்ததைவிட அதிகமான விகிதத்தில் மக்களிடம் இதய வீக்கம் அடையாளம் காணப்படவில்லை என்று பைசர் கூறியது.

தடுப்பூசி போட்ட சுமார் 5 மில்லியன் பேரில், இதயத் தசையழற்சி என்ற அந்த மருத்துவ நிலை 10 க்கும் மேற்பட்டோரிடம் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இஸ்ரேலின் வைரஸ் தொற்று முறியடிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 2ஆவது முறை தடுப்பூசி போட்ட பின், அது ஏற்படுவதாக அவர் கூறினார்.

அதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இருக்கிறதா, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக அதிகமா ஆகியவை பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் விபரித்தார்.

அது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது. 30 வயதுக்கும் மேற்பட்டோரிடையே பெரும்பாலான சம்பவங்கள் தென்பட்டன.

No comments:

Post a Comment