சர்வதேச பயணிகள் விமானத் தடையை மேலும் நீட்டித்தது இந்தியா - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

சர்வதேச பயணிகள் விமானத் தடையை மேலும் நீட்டித்தது இந்தியா

தற்போதைய கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் இந்தியா சர்வதேச பயணிகள் விமானத் தடையினை மே 31 வரை நீட்டித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

எனினும் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களுக்கு விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 30 (இன்று) வரை இந்தியா இந்த தடையுத்தரவினை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad