பாணந்துறையில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

பாணந்துறையில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது

(எம்.மனோசித்ரா)

பாணந்துறையில் போக்குவரத்து கடமைகளிலிருந்த பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை - மொரந்துட்டுவ பகுதியில் 52 வயதான குறித்த சந்தேகநபர் பாணந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபர் பயணித்த வாகனத்தை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை.

இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது குறித்த சந்தேகநபர் 1000 ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகள் அதனை மறுத்த போதும் மீண்டும் மீண்டும் பணத்தை வழங்க முற்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad