தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண பாராளுமன்ற விசேட குழு நியமிக்க பிரேரணை - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண பாராளுமன்ற விசேட குழு நியமிக்க பிரேரணை

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த பிரேரணை அன்றையதினம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இந்த விசேட குழுவில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர். அத்துடன், சபாநாயகரினால் குழு நியமிக்கப்பட்டதை அடுத்து, 6 மாதங்களில் அதன் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதும் தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இக்குழுவின் பொறுப்பாகுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad