விமான பணியாளருக்கு கொரோனா : இந்திய விமானத்தை திருப்பி அனுப்பிய சிட்னி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

விமான பணியாளருக்கு கொரோனா : இந்திய விமானத்தை திருப்பி அனுப்பிய சிட்னி

சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பயணிகளை ஏற்றிச் செல்ல சிட்னி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் இந்திய விமான சேவைக்கு தடைவிதித்துள்ளன. பல நாடுகள் கடும் சோதனைக்குப்பின் அனுமதிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்படுவதற்கு முன் அனைத்து பணியாளர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் நெகட்டிவ் வர பணிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் சிட்னியை அடைந்ததும், பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது ஒரு பணியாளருக்கு கொரோனா பொசிட்டிவ் முடிவு வந்துள்ளது. அவரை தனிமைப்படுத்தியதுடன் பயணிகளை ஏற்ற அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் பணியாளர்கள் மற்றும் சரக்குடன், பயணிகள் இல்லாமல் ஏர் இந்தியா விமானம் இந்தியா திரும்பியது. இந்த நிலையில் மே 15ம் திகதி வரை இந்தியாவில் இருந்து விமான சேவைக்கு அவுஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment