கலந்துகொள்வதாக உறுதியளித்த சாணக்கியன் இறுதி நேரத்தில் சதி : தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என இராதா கவலை - News View

Breaking

Post Top Ad

Sunday, April 25, 2021

கலந்துகொள்வதாக உறுதியளித்த சாணக்கியன் இறுதி நேரத்தில் சதி : தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என இராதா கவலை

நுவரெலியாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளாத நிலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சாணக்கியன் அழைப்பை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் கவலை வெளியிட்டுள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சாணக்கியனை அழைத்திருந்தோம். சாணக்கின் இந்த இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான ஏற்பாட்டினை செய்தவர் சுமந்திரன்.

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியான ஹரின் பெர்ணான்டோ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியான சாணக்கியன் ஆகியோரது வருகையை எதிர்பார்த்திருந்தோம்.

இந்த நிலையில் ஹரின் பெர்ணான்டோ மாநாட்டின் முதல் நாள் மாலை தனது மெய் பாதுகாப்பாளர் மூலமாக, தனக்கு அடுத்த நாள் வழக்கறிஞர்களை சந்திக்க வேண்டிய கூட்டமொன்று இருப்பதாக அதனால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து சாணக்கியனின் வரவை எதிர்ப்பார்த்திருந்தோம். 17ஆம் திகதி கூட்டத்திற்கு வருவதற்கான இடத்தையெல்லாம் அவர் கேட்டிருந்த நிலையில், காலையில் கூட்டம் சேர்ந்திருக்கவில்லை என்பதால் 10.30 மணிக்கு வந்தால் போதுமானது என நாம் அறிவித்திருந்தோம் அவருக்கு.

ஆனால் கூட்டம் ஆரம்பித்த போது அவர் கூட்டத்திற்கு வரவில்லை. அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அவர் அதனை திட்டமிட்டு செய்தாரா இல்லை ஏதேனும் அவசர வேலை வந்து விட்டதா என்பது எமக்கு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad