அம்பாறை, மொணராகலை, மாத்தளையிலும் சில இடங்களுக்கு பூட்டு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

அம்பாறை, மொணராகலை, மாத்தளையிலும் சில இடங்களுக்கு பூட்டு

அம்பாறை, மொணராகலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (28) காலை 6.00 மணி முதல் குறித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், வெல்லவாய - வெஹெரயாய மற்றும் கொட்டன்கஹபொக்குன கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

புத்தல - ரத்தலகம கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் உஹன - குமாரிகம கிராம சேகவர் பிரிவு மற்றும் மாத்தறை மாவட்டத்தின் நாவுல - அலுகொல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad