புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை புகழ்பவர்கள் தராதரம் பாராது கைதாவர் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை புகழ்பவர்கள் தராதரம் பாராது கைதாவர் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும் நினைவுகூர்ந்தும் பகிரங்கமாகக் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் அனைவரும் இனிமேல் தகுதி தராதரம் பாராது உடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களைப் பதிவிடுபவர்களும் இவ்வாறு கைது செய்யப்படுவார்களென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad