விடுதலைப் புலிகள் அமைப்பு தலைவரின் படத்தை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

விடுதலைப் புலிகள் அமைப்பு தலைவரின் படத்தை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120 ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தணித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

இளைஞன் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.

வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து இளைஞனை எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, இளைஞனின் தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படம் உள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad