வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினால் கொரோனா காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி விசேட பரிசோதனை நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினால் கொரோனா காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி விசேட பரிசோதனை நடவடிக்கை

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கத்தின் காரணமாக கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து காணப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினால் கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி விசேட பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் வாழைச்சேனை பிரதான வீதியில் கொரோனா பாதுகாப்பு கருதி பரிசோதனை நடவடிக்கை திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது முகக்கவசம் அணியாது சுகாதார விதிமுறையை மீறி வீதியில் பயணிப்போரை பிடித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், முகக்கவசம் இல்லாதவர்களுக்கு பொலிஸாரினால் முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், வாகனங்களின் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணயம் செய்யுமாறு எச்சரிக்கை வழங்கப்பட்டது.

அத்தோடு கொரோனா பாதுகாப்பு தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரினால் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad