காலம்சென்ற முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரான மர்ஹூம் எம்.எச். மொஹமட் அவர்களின் நினைவு தினம் இன்று - News View

Breaking

Post Top Ad

Sunday, April 25, 2021

காலம்சென்ற முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரான மர்ஹூம் எம்.எச். மொஹமட் அவர்களின் நினைவு தினம் இன்று

இலங்கை அரசியல் வரலாற்றில் இன்று வரை பேசப்பட்டு கொண்டிருக்கும் காலம் சென்ற முன்னாள் சபாநாயகரான எம்.எச்.மொஹமட் அவர்களின் ஐந்து வருட நினைவு நாள் இன்றாகும்.

இவர் கடந்த 2016 ஏப்ரல் 26 ஆம் திகதி காலமானார். அவர் இன்று வாழ்ந்திருந்தால் 2021 ஜூன் 15 ஆம் திகதி தனது 100 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருப்பார் என்பது ஒரு குறிப்பிடதக்க விடயமாகும்.

இவர் ஜே.ஆர்.ஜயவர்தனா அவர்களின் ஆட்சியின் கீழ் தனது அரசியலில் மிக உயர் ஸ்தானத்தில் இருந்தார்.

இவரது வெற்றிக்காக அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டார்கள். மிக அமைதியான சிறப்பான ஆளுமை மிக்க தாராளமனப்பான்மை கொண்ட அரசியல் ஆளுமையை தற்போது காண்பது அரிதாகும்.

அவரது வாழ்க்கையின் சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகையில் கொழும்பில் ஒரு பழைமைவாத குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். அவர் கொழும்பு வெஸ்லி
கல்லூரியின் பழைய மாணவனாக திகழ்ந்தார். 

அவர் ஆரம்பத்தில் குடும்ப வணிக அலுவல்களில் ஈடுபட்டு பின்னர் கப்பல்துறையில் ஈடுபாடு கொண்டார். இந்தப் பின்னணியில் மறைந்த எம்.எச் மொஹமட் முதன் முதலில் 1945 ஆம் ஆண்டில் கொழும்பு நகரசபையில் ஒரு இளம் உறுப்பினராக நுழைந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியினது ஆதரவில் ஒரு சுயாதீன வேட்பாளராக மாளிகாவத்தை நகர சபைக்காக போட்டியிட்டார்.

பின்னர் ஓர் இளம் ஆற்றல் மிக்க அரசியல்வாதியாக 1960 இல் ஐக்கிய தேசிய கட்சியிருந்து கொழும்பின் முதல் முஸ்லிம் மேயராக உயர்வு பெற்றார்.

1965 ஆம் ஆண்டு 95 சிங்கள பௌத்த தேர்தல் தொகுதியான பொரளை
தேர்தல் தொகுதியில் பேட்டியிட்டதன் மூலம் பிரதான அரசியலில் நுழைந்தார்.

இருப்பினும் அப்போதைய இடதுசாரி நட்சத்திர வேட்பாளரான திருமதி. விவியன் குணவர்தனாவை விட 1000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டட்லி சேனனாயக்காவின் ஆட்சியில் ஒரு கபினட் அமைச்சராக இவர் சேவையாற்றினார்.

பின்னர் அவர் 1965 இல் தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக 1965 இல் கடமையாற்றியதோடு தனியார் துறை ஊழியர்களுக்கு உபகாரப்பணத்தை வழங்குவதற்கான சட்டத்தை உருவாக்குவதில் மிக பொறுப்புடன் செயல்பட்டார்.

சர்வதேச அளவில் கொழும்பில் வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கான கருத்தை முன்வைத்தவரி்ன் இவர் மிக முக்கியமான ஒருவராக கருதப்படுகின்றார்.

சவுதி அரேபியாவின் உலக முஸ்லீம் லீக்கின் ஆரம்ப உறுப்பினராக இருந்ததோடு ஓர் உயர்தர நிறுவனமொன்றில் முஸ்லிமல்லாத நாடொன்றிலிருந்து பணியாற்றிய ஒரே உறுப்பினராகவும் காணப்பட்டார்.

தற்போது பிரமாண்டமான முறையில் மருதானையில் இயங்கி வரும் இஸ்லாமிக் சென்டரின் ஸ்தாபகருமாவார். இந்நிலையத்தில் பல நூற்றுக்கணக்கான புலமை பரிசில்கள் வறிய மாணவர்களுக்கு வழங்கி வருகின்றமை என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

எனவே இவரது மறைந்த நாளையொட்டி அவரது குடும்பத்தினர் மற்றும் அனைத்து மக்களும் இவருக்கு ஜன்னாவில் எல்லையற்ற கருணையுடன் மிக உயர்ந்த ஸ்தானத்தை வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றனர்.

சில்மியா யூசுப்
இளம் சமாதான ஊடகவியலாளர்

No comments:

Post a Comment

Post Bottom Ad