வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால், ஹேர்லி சில்வேரா தரப்பினர் கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் நிர்வாகத்தை கைப்பற்றினர் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால், ஹேர்லி சில்வேரா தரப்பினர் கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் நிர்வாகத்தை கைப்பற்றினர்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் தலைவராக போட்டியின்றி ஹேர்லி சில்வேரா மீண்டும் தெரிவானார். 

கொழும்பு கால்பந்தாட்ட லீக்குக்கான தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் மொஹமட் பாயிஸ் - மொஹமட் சஹரான் தரப்பினர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து, ஹேர்லி சில்வேரா தரப்பினர் கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் நிர்வாகத்தை கைப்பற்றினர்.

இதன்படி தலைவராக ஹேர்லி சில்வேரா (ரட்ணம் வி.க.), செயலாளராக மொஹமட் நஜீப்தீன் (சுப்பர் ஸ்டார் வி.க), பொருளாலராக திலுக்க பெரேரா (ஓல்ட் பென்ஸ்), உப தலைவர்களாக சிப்லிடோன் (அளுத்துட யுனைட்டெட்), மொஹமட் பலீல் (ஓல்ட் ரோயல்), பென்சி பெர்னாண்டோ (ஓல்ட் வெஸ்லி), சுனில் நிஷாந்த (லெவன் லயன்ஸ்) ஆகியோர் தெரிவாகினர்.

இலங்கை கால்பந்தாட்ட தலைவர் பதவிக்கு சம்மேளனத்தின் தற்போதைய செயலாளர் ஜஸ்வர் உமர், முன்னாள் தலைவரான மணிலால் பெர்னாண்டோவின் மகனும் சம்மேளனத்தின் வைத்திய குதை்தலைவருமான மணில் பெர்னாண்டோ , தேசிய கால்பந்தாட்ட முகாமைத்துவ குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் அத்துல கொடிப்பிலி ஆகியோரிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவுகின்ற இத்தருணத்தில், ஹேர்லி சில்வேரா தரப்பினர் கொழும்பு லீக்கை நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளமையால் இவர்கள் தங்களது ஆதரவை யாருக்கு வழங்குவார்கள் என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment