பண்டாரநாயக்க விமான நிலைய பி.சி.ஆர். ஆய்வகம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமக நிறைவு - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

பண்டாரநாயக்க விமான நிலைய பி.சி.ஆர். ஆய்வகம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமக நிறைவு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர் ஆய்வக இடமாற்றம் தொடர்பாக இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்துடன் நேற்று (01) சுற்றுலா அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சுகாதார அமைச்சின் தொடர்புடைய அதிகாரிகளும், விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் தொடர்புடைய அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதன்போது ஆய்வகத்தை மிகவும் பயனுள்ளதாக இடம் மாற்றுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

இது தொடர்பாக தேவையான உதவிகளை வழங்க ரவி குமுதேஷ் தலைமையிலான இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் ஒப்புக்கொண்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad