தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (Ceylon Estate Workers’ Education Trust) கோரியுள்ளது. 

கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி கற்கை நெறிகளை தொடர்வதற்காக இந்த புலமை பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (06 பாடங்களில் திறமை சித்தி) அல்லது உயர்தர பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன், 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இதற்காக இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். 

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன், பிறப்பு சான்றிதழ், சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப்பரீட்சை பெறுபேற்றின் சான்றிதழ், பெற்றோரின் தற்போதைய சம்பளப்பட்டியல் ஆகியவற்றின் பிரதிகள் தற்போது வதிவிட தோட்ட முகாமையாளரினால் உறுதி செய்யப்பட்ட பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தை கொழும்பில் உள்ள இந்திய உயர்தானிகரின் இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். அந்த இணையத்தளத்தின் முகவரி www.hcicolombo.gov.in என்பதாகும்.

விண்ணப்பப்படிவங்களை கொழும்பு 03, இல. 36/38 காலி வீதி என்ற முகவரியில் உள்ள இந்திய தூதரகத்திலும், இல. 31, ரஜபில்ல மாவத்தை, கண்டி என்ற முகவரியில் உள்ள உதவி இந்திய தூதரகத்திலும் பெற்றுக் கொள்ள முடியும்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை CEWET c/o High commission of India, P.O. Box 882, Colombo - 03 என்ற முகவரிக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment