காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி மீட்பு - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி மீட்பு

(செ.தேன்மொழி)

காலி சிறைச்சாலையில் மதிலுக்கு மேல் தொலைபேசிகள், போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் எறியப்பட்ட பொதியொன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொதிக்குள்ளிருந்து இரு தொலைபேசிகள், 200 போதை வில்லைகள் அடங்கிய இரு பக்கற்றுகள், ஹெரோயின் போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் இரு பக்கற்றுகள் மற்றும் 10 புகையிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதி தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், காலி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad