நாட்டில் பாம் மரங்களை வளர்ப்பதற்கு இடமளிக்கப்படாது என்கிறார் அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

நாட்டில் பாம் மரங்களை வளர்ப்பதற்கு இடமளிக்கப்படாது என்கிறார் அமைச்சர் பந்துல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள போதிலும் பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாம் எண்ணெயை தடை செய்யவில்லை, இவை தொடர்ந்தும் விதிமுறைகளுடன் இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் பாம் எண்ணெய்க்கு தடை இல்லை எனவும், புதிதாக பாம் மரங்களை வளர்ப்பதற்கு இடமளிக்கப்படாது எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா குறித்து உறுப்பினர் மொஹம்மட் முஸம்மில் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, கடந்த 2015-2019 ஆண்டு காலத்தில் இலங்கைக்கு 461 மில்லியன் கிலோ கிராம் பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, இதற்காக 2 இலட்சத்து 13 ஆயிரத்து 8 மில்லியன் (2,13,008) மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-2014 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தொகையை விடவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

எவ்வாறு இருப்பினும் பால்மா, சீனி போன்றவற்றில் உடலுக்கு ஒவ்வாத அல்லது விஷ திரவங்கள் இருப்பதாக நீணடகால விவாதமொன்று உள்ளது. உணவு தர நிர்ணயம் குறித்து இப்போது பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் உணவு தர நிர்ணய நிறுவனத்திற்கு மேலாக வர்த்தக அமைச்சின் சில நிறுவனங்கள் உள்ளன. அவர்களின் ஆய்வுகளுக்கு இவை உட்படுத்தப்படுவதுடன் உலகமே ஏற்றுக் கொள்ளும் தரமான ஆய்வுகூடமும் பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ளது.

ஆகவே இப்போது அரசாங்கம் இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை உருவாக்கி வருகின்றது. அரசாங்கம் பாம் எண்ணெய் இறக்குமதியையும் தடை செய்துள்ளது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் குமார் வெல்கம, தேசிய ரீதியில் பாம் எண்ணெய் உற்பத்திகள் முன்னெடுக்கப்படுகின்றது, அதனை பயன்படுத்த அரசாங்கம் அனுமதி வழங்குகின்றதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய ரீதியிலான உற்பத்தியை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் பாம் எண்ணெய்யை அதன் தரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றால் அதனை அரசாங்கம் தடை செய்யாது. 

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்யையே தடை செய்துள்ளோம். அதுவும் ஒரேடியாக தடை செய்ய முடியாது. பிஸ்கட் போன்றவற்றிற்கு இவை பயன்படுத்தப்படுகின்றது. எனவே அதற்கு தேவையான சுத்தமான பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்றார்.

மீண்டும் கேள்வி எழுப்பிய குமார் வெல்கம எம்.பி தேசிய உற்பத்தியாளர்கள் புதிதாக பாம் மரங்களை வளர்க்க இடமளிக்க முடியுமா?

அமைச்சர் பந்துல பதிலளிக்கையில் இல்லை, புதிதாக பாம் மரங்களை வளர்க இடமளிக்க மாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment