இடியன் துப்பாக்கி வெடித்து காயமடைந்த நிலையில் ஒருவர் கைது - முல்லைத்தீவில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

இடியன் துப்பாக்கி வெடித்து காயமடைந்த நிலையில் ஒருவர் கைது - முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் பன்றிக்கு வெடி வைப்பதற்காக இடியன் துப்பாக்கி பயன்படுத்த முற்பட்ட போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமுற்ற நிலையில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தின் வனப் பகுதியில் பன்றிக்கு வெடி வைப்பதற்காக சட்டவிரோத இடியன் துப்பாக்கியை கொண்டு சென்று தயார்படுத்தியபோது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இருப்பினும் குறித்த நபர் இரகசியமாக மருந்து எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்த நிலையில் குறித்த விடயம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் அதற்குரிய குண்டு வகைகளை பொலிசார் கைப்பற்றியுள்ளதோடு குறித்த நபரையும் கைது செய்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் குமுழமுனை 6 ம் வட்டாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 அகவையுடையவர் என தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad