இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து மிலான் ஜயதிலக்க, அஜித் சிசிர குமார விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து மிலான் ஜயதிலக்க, அஜித் சிசிர குமார விடுவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க மற்றும் தொம்பே பிரதேச சபை உறுப்பினர் கே.டி. அஜித் சிசிர குமார ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கருங்கல் அகழ்வு அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியதுடன், அதில் 6 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகள் சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

பிரதிவாதிகளுக்கு எதிராக தமது ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் காணப்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, குற்றப்பத்திரத்தை மீளப்பெற்றதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கங்கா ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.

பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கும் போது பிறப்பிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையும் நீக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment