ரிஷாட் மற்றும் ரியாஜ் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம் - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

ரிஷாட் மற்றும் ரியாஜ் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவி, ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad