இராகலையிலுள்ள தோட்டக் குடியிருப்பில் தீ : 6 வீடுகள் சேதம், 30 பேர் பதிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

இராகலையிலுள்ள தோட்டக் குடியிருப்பில் தீ : 6 வீடுகள் சேதம், 30 பேர் பதிப்பு

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்த தீ விபத்தில் குறித்த வீடுகளில் குடியிருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் 9ஆவது இலக்க நெடுங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் ஒண்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும் பெருமளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்றும் மக்கள் தெரிவித்தனர்.

இதுவரை எவ்விதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றதோடு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் வந்து பார்க்கவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad