டி-20 உலக் கிண்ணம் இந்தியாவிலிருந்து எமிரேட்ஸுக்கு செல்கிறதா ? - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

டி-20 உலக் கிண்ணம் இந்தியாவிலிருந்து எமிரேட்ஸுக்கு செல்கிறதா ?

கொவிட்-19 அச்சுறுத்தல்கள் குறையவடையவில்லை என்றால் எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட டி-20 உலகக் கிண்ண போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் வாரியம் 2021 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான நம்பிக்கையை கைவிடவில்லை என்றாலும், கிண்ணத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எடுத்துச் செல்வது தற்செயலான திட்டம் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

போட்டிகள் அவ்வாறு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டாலும் அதன் ஹோஸ்டிங் உரிமைகள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடமே இருக்கும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அண்மைய எழுச்சிக்கு முன்னர் மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், தர்மசாலா, அஹமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய ஒன்பது இடங்களில் டி-20 உலகக் கிண்ண போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.

எனினும் இரண்டாவது கொவிட்-19 அலையின் தீவிரம் இந்தியாவில் 2021 ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கிண்ணம் நடைபெறுமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad