யாழில் இடம்பெற்ற விபத்தில் 15 இராணுவத்தினர் காயம் - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

யாழில் இடம்பெற்ற விபத்தில் 15 இராணுவத்தினர் காயம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 15 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

கைதடி - மானிப்பாய் வீதி ஊடாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் யாழ்ப்பாணம் - பலாலி வீதி வழியாக இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின் வாகனமும் கடும் சேதத்திற்குள்ளானது.

காயமடைந்த இராணுவத்தினர் 15 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையின் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் கோப்பாய் பொலிஸாரும் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad