இம்மாதம் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் கிடைக்கும் : பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

இம்மாதம் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் கிடைக்கும் : பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் அறிவிப்பு

வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம், இம்மாத சம்பளத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் கிடைக்கும் என பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 5 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் அந்தக் கொடுப்பனவு அமையும் என நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

எனினும், தாம் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்க தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் அதனைத் தவிர மேலதிக கொடுப்பனவுகள் அதில் உள்ளடக்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கை தொடர்பில் தற்போது கூற முடியாது எனவும், காலநிலை மற்றும் உற்பத்தி போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அது தீர்மானிக்கப்படும் எனவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad