தவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை கட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

தவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை கட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ்மா அ­திபர் பூஜித் ஜய­சுந்­தர, முன்னாள் பாதுகாப்பு செய­லாளர் ஹேம­சிறி பர்­ணாந்து ஆகி­யோ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடர்­வ­தற்­கான குற்­ற­வியல் நட­வ­டிக்கை குறித்து ஆராய சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­ளும்­ப­டியும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்கு­தல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு தனது அறிக்­கையை கடந்த பெப்­ர­வரி 1 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யிடம் கையளித்­தது. 

எனினும் கடந்த மூன்று வாரங்­க­ளாக இவ்­வ­றிக்கை பகிரங்கப்படுத்தப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்து அறிக்கையை பொதுமக்­களின் பார்­வைக்கு வழங்­கு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள், பேராயர் மல்கம் ரஞ்சித், ஞான­சார தேரர் உட்­பட பலரும் கோரிக்­கை­களை முன்­வைத்து வந்­தனர். 

இந்நிலை­யி­லேயே குறித்த அறிக்­கையை ஜனா­தி­பதி செய­லகம் கடந்த திங்­கட்­கி­ழமை சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கைய­ளித்­தது. சபா­நா­யகர் இவ்­வ­றிக்­கையை பாரா­ளு­மன்ற நூல­கத்தில் எம்.பி.க்களின் பார்­வைக்­காக வைக்குமாறு உத்­த­ர­விட்டார். 

இத­னை­ய­டுத்து இவ்­வ­றிக்­கையை எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்பி­னர்­க­ளான ஹரின் பெர்­ணான்டோ மற்றும் நிரோஷன் பெரேரா ஆகியோர் உட­ன­டி­யாக பார்­வை­யிட்­டனர். அதுமாத்திரமன்றி அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யுள்ள சில பக்கங்களை படம்­பி­டித்து ஹரீன் பெர்­ணான்டோ எம்.பி. தனது டுவிட்­டரில் பதி­விட்டார். இத­னை­ய­டுத்தே அதன் உள்­ள­டக்­கங்கள் வெளி­வர ஆரம்­பித்­தன.

இந்நிலையில் இவ்­வ­றிக்­கையில் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்ள மேலும் பல விட­யங்கள் ‘விடி­வெள்­ளி‘க்கு கிடைக்கப் பெற்­றது. அவற்றை இங்கு தொகுத்து தரு­கிறோம்.

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2019 ஏப்ரல் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இந்­தி­யா­வுக்கும், சிங்­கப்­பூ­ருக்கும் சென்ற சந்­தர்ப்­பத்தில் பாது­காப்பு அமைச்சுப் பத­விக்­கென எந்தவொரு பதில் நிய­ம­னமும் வழங்­காமை மற்றும் தாக்­குதல் தொடர்பில் அறிந்­தி­ருந்தும் அவ்­வாறு சென்­றமை கார­ண­மாக அது சஹ்­ரானின் ஐ.எஸ். தாக்­கு­த­லுக்கு வழிசமைத்­தது. இது அரசியலமைப்புச் சட்­டத்தை மீறி­யுள்­ளமை தெளி­வா­கி­றது.

அத்­தோடு முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதிராகவும் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட வேண்டும். முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால் முன்னாள் பிர­தமர் ரணில் விக்கிரமசிங்­க தேசிய பாது­காப்பு கவுன்ஸில் கூட்­டங்­க­ளுக்கு அழைக்­கப்­ப­டாமை பெருங் குறை­பா­டாகும்.

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் மேல­தி­க­மாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பர்­ணாந்து, முன்னாள் தேசிய உளவுப் பிரிவு பிர­தானி சிசிர மெண்டிஸ், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்­தர, அரச புல­னாய்வு பிரிவு முன்னாள் பணிப்­பாளர் நிலந்த ஜய­வர்­தன, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்­தன முன­சிங்க ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவும் குற்­ற­வியல் பத்­தி­ரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜமா­அத்தே இஸ்­லாமி அமைப்பு மற்றும் ஜமா­அத்தே இஸ்­லாமி மாணவர் அமைப்பு மற்றும் தவ்ஹீத் அமைப்புகள் தடை செய்­யப்­பட வேண்டும். இந்த அமைப்புகளுக்கெதி­ராக குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­வ­தற்­காக அவ்­வா­றான அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் மற்றும் உறுப்­பி­னர்கள் தொடர்பில் ஆழ­மாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஐ.எஸ். அமைப்பு போன்ற அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை இந்நாட்டில் தடை செய்­வ­தற்­காக உரிய சட்­டங்கள் இயற்­றப்­பட வேண்டும்.

பொது­வான இடங்­களில் முகத்தை மறைத்து அணியும் ஆடை தடை செய்­யப்­பட வேண்டும்.

பொது­மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் கீழ் அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்­தாது இலங்கை இரா­ணு­வத்தின் உத­வியை பொலிஸார் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்ட நிலைமை உரு­வாக்­கப்­பட வேண்டும்.

சஹரான், ரிழ்வான், ஸைனி, இல்ஹாம், இன்சாப், ஜெமீல், ஹஸ்துன், முஆத், ஆசாத், முபாரக், நௌபர், மில்ஹான், சாதிக் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் நேர­டி­யாகத் தொடர்புபட்டவர்களாவர்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்டு தாக்குதல் நடத்­திய மொஹமட் இப்­ராஹிம் இன்சாப் அஹமட் என்பவ­ருக்கு சொந்­த­மான வெல்­லம்­பிட்­டியில் அமைந்­துள்ள செம்பு உலோக தொழிற்­சா­லைக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் நில­விய தொடர்­புகள் சம்­பந்­த­மாக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு விசா­ர­ணை­க­ள் கைய­ளிக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அனைத்து மதங்­களைச் சேர்ந்த சமயத் தலை­வர்கள் அடங்­கிய ஜனாதி­பதி ஆலோ­சனைக் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும். இக்­கு­ழுவில் அர­சி­யல்­வா­திகள் எவரும் நிய­மிக்­கப்­படக் கூடாது.

சம­யங்­களின் அடிப்­ப­டையில் அர­சியல் கட்­சிகள் பதிவு செய்யப்படுவது தடை செய்­யப்­பட வேண்டும். சம­யத்தின் பெயர் அர­சியல் கட்­சி­க­ளுக்கு சூட்­டப்­ப­டக்­கூ­டாது. அரச சார்­பற்ற நிறுவனங்­களின் செயற்­பா­டுகள் கண்­கா­ணிக்­கப்­பட வேண்டும்.

பாது­காப்பு அமைச்சு எப்­போதும் ஜனா­தி­ப­தியின் கீழேயே செயற்­பட வேண்டும்.

சமயம் மற்றும் சமயக் கொள்­கை­க­ளுடன் கூடிய அர­சியல் கட்­சிகள் புதி­தாக பதி­வு­ செய்­யப்­ப­டக்­ கூ­டாது. தற்­போது வரை பதிவு செய்யப்பட்­டுள்ள இவ்­வா­றான அர­சியல் கட்­சிகள் தேவை­யான மாற்­றங்­களை செய்து கொள்­வ­தற்கு கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்டும்.

5 வய­துக்கும் 18 வய­துக்கும் உட்­பட்ட அனைத்து மாண­வர்­களும் அங்கீ­க­ரிக்­கப்­பட்ட அரச அல்­லது தனியார் நிறு­வ­னங்­களில் கல்வி கற்­பது கட்­டா­ய­மாகும். பிள்­ளை­க­ளுக்கு வீட்டில் மாத்­திரம் கல்வி போதிக்க முடி­யாது. சில தற்­கொலை குண்­டு­தா­ரிகள் தமது பிள்ளைக­ளுக்கு வீட்­டி­லேயே கல்வி போதித்­த­தாக ஆணைக்குழுவுக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அனைத்து கல்வி வெளி­யீ­டு­க­ளிலும் அடிப்­ப­டை­வாத சிந்­த­னைகள் உள்­ள­னவா என்பதை கண்­ட­றிய சபை­யொன்று நிறு­வப்­பட வேண்டும்.

சிங்­கள, தமிழ் மற்றும் ஆங்­கில புனித குர்ஆன் பிர­திகள் சமய விவகார அமைச்­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு வெளி­யிடப்­பட வேண்டும். இதனால் தவ­றான மொழி­ பெ­யர்ப்­பு­களை முஸ்லிம்களால் தவிர்க்க முடி­யு­மாக இருக்கும்.

பயங்­க­ர­வாத குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்டு தண்­டனை வழங்­கப்­பட்டு, தண்­டனை அனு­ப­வித்து விடு­த­லை­யாகும் அனைத்து நபர்களும் ஆகக் குறைந்­தது 5 வருட காலம் கண்­கா­ணிப்பில் இருக்க வேண்டும்.

அனைத்து சமய நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவும் ஒரே அமைச்சே செயற்பட வேண்டும். ஒவ்­வொரு சம­யத்­துக்­கு­மென தனி­யான திணைக்­க­ளங்கள் இருக்­கலாம். ஆனால் அவை அனைத்தும் சமய நட­வ­டிக்­கை­க­ளுக்­கான ஒரே அமைச்சின் கீழேயே இயங்க வேண்டும். இந்த அமைச்சு ஜனா­தி­ப­தியின் கீழ் அமைய வேண்டுமென அர­சி­ய­ல­மைப்பில் சட்­ட­மாக இயற்­றப்­பட வேண்டும்.

அனைத்து அரபு மத்­ர­ஸாக்கள், ஹிப்ழ் குர்ஆன், அரபுக் கல்­லூ­ரிகள், அரச நிறு­வ­னங்­க­ளினால் கண்­கா­ணிக்­கப்­பட வேண்டும். மத்ரஸாக்களில் சிங்­கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்­கப்­பட வேண்டும்.

தேசிய ரீதி­யிலும், மாகாண ரீதி­யிலும் பாட­சா­லைகள் மத்­தியில் பௌத்த, கிறிஸ்­தவ, இந்து, முஸ்லிம் என்று வெவ்­வே­றாக இயங்­காது எதிர்­கா­லத்தில் அனைத்து மாண­வர்­களும் ஒன்­றி­ணைந்து கற்கும் பாட­சா­லைகள் அமைய வேண்டும்.

15 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ருக்கும் அனைத்து தக­வல்­க­ளையும் உள்­ள­டக்கும் வண்ணம் ‘இலத்­தி­ர­னியல் சிப்‘ ஒன்று அடங்­கிய அடை­யாள அட்டை வழங்­கப்­படல் வேண்டும். அதில் உள்ள தகவல்கள் ஒவ்­வொரு வரு­டமும் சரி­பார்க்­கப்­படல் வேண்டும்.

தேசிய உளவு முகவரகம் ஒன்­றினை நிறு­வு­வது தொடர்­பி­லான அங்கீகாரம் உள்ள நிறு­வ­ன­மாக ஜனா­தி­பதி தலை­மை­யி­லான தேசிய பாது­காப்பு கவுன்­சிலே திகழ வேண்டும். தேசிய பாது­காப்பு கவுன்­சிலின் உறுப்­பி­னர்­க­ளாக ஜனா­தி­பதி, பிர­தமர், ஜனா­தி­பதி செயலர், பிர­த­மரின் செயலர், நிதி அமைச்சின் செயலர், வெளிவிவகார அமைச்சின் செயலர், பாது­காப்பு செய­லாளர், பாதுகாப்பு படை­களின் தலைமை அதி­காரி, முப்­படைத் தள­ப­திகள், தேசிய உளவுத் துறை பிர­தானி, பொலிஸ்மா அதிபர், தேசிய உளவுச் சேவை பணிப்­பாளர், இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர், முப்­ப­டை­களின் புல­னாய்வுப் பிரி­வு­களின் பணிப்­பா­ளர்கள், பயங்கரவாத புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர், குற்றப் புலனாய்வுத் திணைக்­கள பணிப்­பாளர் ஆகியோர் அங்கம் வகிக்க வேண்டும்.

அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக சிங்­கப்­பூரில் அமுலில் உள்ள வேலைத் திட்டம், இலங்­கையில் அடிப்­ப­டை­வா­தத்தை தோற்­க­டிக்க முன்னுதாரணமாகும்.

பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் குறித்த குற்­ற­வா­ளிகள் தொடர்பில் செயற்­பட சட்டமா அதிபர் திணைக்­க­ளத்தில் பிரத்­தி­யேக பிரிவொன்றினை நிறு­வுதல் வேண்டும்.

ட்ரோன் கமரா பயன்­பாடு உள்­ளிட்ட ஆகாய மார்க்கம் முற்­றாக அரசினால் மேற்­பார்வை செய்­யப்­படல் வேண்டும். சஹ்­ரானின் குழுவினர் 2018 இல் ட்ரோன் கமரா ஒன்­றினை கொள்­வ­னவு செய்துள்ளனர்.

அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபை கட்­ட­மைப்பில், சூபி முஸ்­லிம்கள் போது­மான அளவு பிர­தி­நி­தித்­துவம் பெறு­வதை உறுதி செய்ய 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்­டத்தை திருத்­துதல். சூபி முஸ்­லிம்கள் ஜம்இய்­யதுல் உலமா சபை கட்­ட­மைப்பில் போது­மான பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற­வில்லை என ஆணைக்குழு­வுக்கு சாட்சியங்கள் கிடைக்கப் பெற்­றி­ருந்­தன.

அனைத்து மதப் பிரி­வி­னர்­க­ளதும், அனைத்து புரா­தன மத நினைவுத் தலங்கள், பாது­காக்­கப்­படல் வேண்டும். இதனை உறுதி செய்ய பொலிஸ் திணைக்­க­ளத்தில் விஷேட பிரி­வொன்று தேசிய, மாகாண மட்­டத்தில் நிறு­வப்­படல் வேண்டும்.

கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டமும் திருத்­தப்­படல் வேண்டும்.

அடிப்­ப­டை­வா­திகள், பயங்­க­ர­வா­திகள் பிர­சா­ரத்­துக்­காக இணையத்தை பயன்­ப­டுத்­து­வதை தடுக்க, இணைய சேவை வழங்கு­னர்­க­ளுடன் இணைந்து மேற்­பார்வை செய்தல், அவ்­வா­றான இணையத் தளங்­களை முடக்­குதல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு தேவை­யான சட்­டங்கள் இயற்­றப்­படல் வேண்டும்.

மிஷ்காத் ஆய்வு மையத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள, உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் எழு­திய ‘அல்குர்ஆன் வன்­மு­றையை தூண்டுகிறதா?’ எனும் புத்­தகம், நாட்டில் முஸ்லிம் சிறார்­க­ளுக்கு குர்ஆனை கற்­பிக்கும் நட­வ­டிக்­கை­களில் பயன்­ப­டுத்த கட்டாயமாக்கப்­படல் வேண்டும்.

ஏனைய அனைத்து மத கல்வி நிறு­வனங்­களும் (பெளத்தம், கிறிஸ்தவம், இந்து) மத்­ர­ஸாவைப் போன்றே மேற்­பார்வை செய்யப்படல் வேண்டும்.

சமய கல்வி நிறு­வங்­களில் கற்­பிக்­கப்­படும் பாடத்­திட்­டமும், மத்­ரஸா விட­யத்தில் ஆணைக்குழு செய்­துள்ள பரிந்­து­ரை­களை ஒத்­த­தாக, அர­சாங்­கத்­தினால் முன்­மொ­ழி­யப்­பட்­ட­தாக அமைதல் வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்த ஒருவர் தொடர்பில் 2 மில்­லியன் ரூபாவும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு 5 இலட்சம் ரூபாவும் நட்­ட­ஈ­டாக வழங்­கப்­படல் வேண்டும். தற்­போதும் நட்ட ஈடு வழங்கப்பட்­டி­ருப்பின் அத்­தொ­கையை கருத்தில் கொள்­ளலாம்.

வெளி­நாட்டில் உள்ள பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களை நாடு கடத்துவது தொடர்பில் நாடு கடத்தல் சட்ட திட்­டங்­களை பலப்­ப­டுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல், பயங்­க­ர­வாத குற்­றங்கள் தொடர்பில் வழக்­கு­களை விசா­ரிக்க தனி­யான மேல் நீதி­மன்றை நிறு­வுதல். அம்மன்று ஊடாக நாளாந்தம் வழக்­கு­களை விசா­ரிக்க வேண்டும். அங்கு சேவைக்கு அமர்த்­தப்­படும் நீதி­ப­தி­களின் பாது­காப்பு உறுதிப்ப­டுத்­தப்­படல் வேண்டும்.

இலங்­கையில் இஸ்­லா­மிய தேசம் ஒன்­றினை உரு­வாக்­குதல் தொடர்பில் செயற்பட்டமை தொடர்பில் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்ப­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்தல் வேண்டும்.

ராசிக் ரபிக்தீன் அல்­லது அப்துல் ராஸிக்­கிற்கு எதி­ராக குற்­ற­வியல் வழக்­கொன்­றினை தொடுக்க முடி­யுமா என்­பது தொடர்பில் உடனடியாக ஆராய்தல் வேண்டும். 2014 மே 6 ஆம் திகதி அவர் வெளியிட்ட கருத்தை மையப்­ப­டுத்தி இந்த பரிந்­துரை முன்வைக்கப்பட்­டுள்­ளது.

பெளத்­தர்கள், இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள் மற்றும் முஸ்­லிம்­களின் மனதில் இலங்­கை­யர்கள் என்ற எண்­ணப்­பாட்டை வளர்க்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இது பாட­சா­லை­களில் சிறு வயது முதல் ஆரம்­பிக்­கப்­படல் வேண்டும்.

சிறு­பான்­மை­யினர், இலங்­கை­யினர் அல்லர் என்ற உணர்­வினை ஏற்ப­டுத்­தாமல் இருத்தல் வேண்டும்.

பொதுபல சேனாவை தடை செய்தல் வேண்டும்.

Peace TV யை தற்­கா­லி­க­மாக இலங்­கையில் தடை செய்தல் வேண்டும். சிங்­கப்பூர், மலே­ஷியா, பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் தற்­போதும் அதனை தடை செய்­துள்­ளன.

அடிப்­ப­டை­வாத மத நிகழ்ச்­சிகள் இடம்­பெ­ற­வில்லை என்­பதை உறுதி செய்ய, தொலைக்­காட்­சிகள், வானொ­லி­களில் ஒலி­ப­ரப்­பாகும் அனைத்து மத சார் நிகழ்ச்­சி­க­ளி­னதும் உள்­ள­டக்­கத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.

வஹா­பி­ஸத்தைப் பரப்­பு­வ­தற்­காக தௌஹீத் ஜமா­அத்­தினால் பயன்ப­டுத்­தப்­படும் முஹம்மத் பின் அப்துல் வஹாப் என்­ப­வரால் எழு­தப்­பட்ட கிதாப் அத்தவ்ஹீத் தடை­ செய்­யப்­பட வேண்டும்.

இப்னு தைமியா, இப்னு அப்துல் வஹாப், அபுல் அஃலா அல் மெள­தூதி மற்றும் ஹஸனுல் பன்னா ஆகியோர் வஹாப்­வா­தத்தின் அறி­ஞர்கள் என்­பதால் அவர்­க­ளது கற்­பித்­தல்கள், வெளி­யீ­டு­களை தடை செய்தல் வேண்டும். மலே­ஷியா, ரஷ்யா, தஜி­கிஸ்தான் போன்ற நாடுகள் வஹாப்­வாத பிரசா­ரங்­களை தடை செய்­துள்­ளன. வஹாப்வாதத்தை தடை செய்துள்ள எகிப்து, வஹாப் மற்றும் சலபி அறிஞர்களாக கருதப்படும் அப்துல் வஹாப், இப்னு தைமியா, இப்ன் பாஸ், இப்ன் ஹுதைம், இப்ன் உதைமின் போன்றவர்கள் எழுதிய அனைத்து புத்தகங்களையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஜோர்தானும் வஹாப்வாத அறிஞர்களின் புத்தகங்களை தடை செய்துள்ளது.

வஹாப்வாத அமைப்புக்கள் என்பதால், அனைத்து தெளஹீத் அமைப்புக்களும் தடை செய்யப்படல் வேண்டும்.

முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டு மற்றும் பொழுது போக்கு விடயங்களில் ஈர்ப்பு ஏற்படும் விதமாக வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படல் வேண்டும். அந்த வேலைத் திட்டம் முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும்.

ஐ.எஸ். உள்ளிட்ட அடிப்படைவாத மதக் குழுக்களை தடை செய்ய சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடுக்க முடியுமா என சட்ட மா அதிபர் பரிசீலிக்க வேண்டும். 2013 பெப்ரவரி 17 ஆம் திகதி மஹரகம, 2014 ஜூன் மாதம் போயா தினமொன்றில் அளுத்கம நகரங்களில் அவர் ஆற்றிய உரைகளை மையப்படுத்தி இதனை ஆராயுமாறு ஆணைக்குழு பரிந்துரைக்கிறது.

Vidivelli
எம்.எப்.எம். பஸீர் - ஏ.ஆர்.ஏ. பரீல்

No comments:

Post a Comment