கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இராணுவத்தினர் நேற்று (30) திகதியில் இருந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்வரும் 2ம் திகதி பெரிய வெள்ளிக்கிழமையாகும் இந்த நாள் கிறிஸ்தவர்களுக்கு விசேட நாள் என்பதுடன் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறும்.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள தேவாலயங்களில் இராணுவத்தினர் தொடர்ந்து இரவு பகலாக தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment

Post Bottom Ad