அமைச்சர் டக்ளஸ், மஹிந்தானந்தவுக்கு மனோ எம்.பி பாராட்டு - News View

Breaking

Post Top Ad

Sunday, March 21, 2021

அமைச்சர் டக்ளஸ், மஹிந்தானந்தவுக்கு மனோ எம்.பி பாராட்டு

யாழ். கச்சேரியிலிருந்து இரவோடிரவாக அனுராதபுரம் கச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட வட பகுதி காணி ஆவணங்கள் மீண்டும் யாழ். கச்சேரிக்கு கொண்டுவரப்பட்டமைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்ட அதிரடியான நடவடிக்கைகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவம் வட பகுதி மக்களது மனங்களை பெரிதும் புண்படுத்துவதாக இருந்து வந்த நிலையில் இந்த இரு அமைச்சர்களும் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்காகவே மனோ கணேசன் பாராட்டுக்களை தனது முகநூலில் தெரிவித்திருக்கிறார். 

அவரது முகநூல் பதிவு பின்வருமாறு வட மாகாண மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அநுராதபுர காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதை இடைநிறுத்தி, மீண்டும் அவற்றை யாழ். பிராந்திய அலுவலகத்துக்கே கொண்டு வர அமைச்சர்கள் மஹிந்தானந்த, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்ற செய்தி வந்துள்ளது.

இது உண்மையானால் மகிழ்ச்சியே. அவ்வாறாயின் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு எனது பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad