பண்டிகைக்கு முன் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் - கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

பண்டிகைக்கு முன் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் - கெஹெலிய ரம்புக்வெல்ல

தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகை காலம் ஆரம்பமாவதற்கு முன்பு, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து முன்னுரிமை குழுக்களுக்கும் கொவிட் நோய்த் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டியில் நடந்த ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் எழுபது சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், சுமார் 35 சதவீதம் பேர் பண்டிகை காலங்களில் கிராமப் புறங்களுக்கு சென்று அந்த பகுதிகளில் நடமாடுவர். 

இதனால் அப்பகுதிகளில் நோய்த் தொற்று ஏற்பட சாத்தியம் அதிகம். எனவே மேல் மாகாணத்திலிருந்து பிற பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளை விட மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், நோயைக் குறைக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்படுகிறது. ஆபத்து இருப்பதாக அடையாளம் காணப்பட்ட குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குள் சுமார் 14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் வழங்க முடியும் என்று சுகாதாரத்துறை நம்புகிறது, ஒரு இலட்சத்து முப்பத்தொன்பதாயிரம் சுகாதாரத் துறைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

எதிர்காலத்தில் இந்த முன்னுரிமை பட்டியலில் பாதுகாப்புப் படையினரும், கிராம சேவகர்களும் சேர்க்கப்படுவார்கள். மேல் மாகாணத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

எம்.ஏ. அமீனுல்லா, அக்குறணை நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad