காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபர் சடலமாக மீட்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபர் சடலமாக மீட்பு

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

புலத்கோபிட்டியவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 77 வயதுடைய எம்.செபஸ்தியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி புலத்கோபிட்டியவிலிருந்து இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள தனது மகனின் வீட்டுக்கு சென்றுள்ளார். எனினும் அவர் அங்கு வராத காரணத்தினால் அன்றையதினமே அவரது மகன் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டையடுத்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள அவரது மகனின் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். 

அப்பகுதியில் சடலமொன்று கிடப்பதை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டனர். 

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அந்த சடலம் தனது தந்தையென மகன் உறுதி செய்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad