மாகாண சபைத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் - எஸ்.எம். மரிக்கார் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

மாகாண சபைத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் - எஸ்.எம். மரிக்கார்

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு பிரசாரத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

இன்று (18) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளது. தேர்தலுக்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் தேர்தலில் எவ்வாறானவர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான திட்டமிலொன்று உள்ளது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், இலக்கொன்றுடன் பயணிக்கின்றோம். நேரடியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் தேர்தல் பிரசாரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள சகல தீர்மானங்களையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad