குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் அஷோக அபேசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் அஷோக அபேசிங்க

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

அசோக அபேசிங்க இன்று காலை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான நிலையிலேயே அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த திங்களன்றும் அதற்கு மறுநாளும் ஆஜராகுமாறு அசோக அபேசிங்கவுக்கு சி.ஐ.டி.யினர் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். எனினும் பாராளுமன்ற அமர்வுகள் காரணமாக அவர் ஆஜராகவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் சில பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அளித்த முறைப்பாட்டுக்கு இணங்கவே சி.ஐ.டி.யினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment