ஐசிசியின் பெப்ரவரி மாத சிறந்த வீரராக அஷ்வின் - முதல் இரு மாதங்களில் இந்திய வீரர்களுக்கே விருது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

ஐசிசியின் பெப்ரவரி மாத சிறந்த வீரராக அஷ்வின் - முதல் இரு மாதங்களில் இந்திய வீரர்களுக்கே விருது

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்து வீசியதுடன், ஒரு சதமும் விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார் அஷ்வின்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் அஷ்வின் அபாரமாக விளையாடினார். 

பெப்ரவரியில் நடைபெற்ற 3 போட்டியில் 24 விக்கெட் வீழ்த்தியதுடன், 176 ஓட்டங்களும் அடித்தார். அதில் சென்னையில் விளையாடிய முக்கியமான போட்டியில் சதம் விளாசினார். 

இதனால் பெப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை அஷ்வின் தட்டிச் சென்றுள்ளார்.

ஜனவரி மாதத்திற்கான விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். இந்த விருதை ஐசிசி அறிமுகப்படுத்திய நிலையில் முதல் இரண்டு மாதங்களும் இந்திய வீரர்களே விருதுகளை கைப்பற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad