இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் எவையும் இல்லை : ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் எவையும் இல்லை : ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நாம் அறிந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே மக்கள் இது தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலார் சந்திப்பில், கடந்த வாரம் யாழில் 'இலங்கை பாரதிய ஜனதா கட்சி' என்ற கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பில் கேட்கப்பட்ட போதே இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் அண்மையில் அந்நாட்டு அரசியல்வாதியொருவரால் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கையிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான சட்ட ரீதியான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே காணப்படுகிறது.

நாம் அறிந்த வகையில் இலங்கையில் அவ்வாறானதொரு கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே நாட்டு மக்கள் இது தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை. அவ்வாறான ஏற்பாடுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என்றார்.

No comments:

Post a Comment