பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் செயலிகள் தீடீர் முடக்கம் : உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் செயலிழப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் செயலிகள் தீடீர் முடக்கம் : உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் செயலிழப்பு

உலகின் பல இடங்களில் வட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியுள்ளதால் பயனாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வட்ஸ்அப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ கோலிங், வொய்ஸ் கோலிங் போன்ற பல்வேறு வசதிகளை வட்ஸ்அப் வழங்கி வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம்தான் இந்த செயலியையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று (19) இரவு 11 மணியளவில் இந்த மூன்று செயலிகளும் திடீரென முடங்கியதால், சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களும், இணையவாசிகளும் பெரும் தவிப்புக்குள்ளாகினர். 

இலங்கை மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது.

மொபைலில் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மட்டுமன்றி கணினியில் இவை செயலிழந்தன. இருப்பினும் சிறிது நேரத்தில் இந்த செயலிகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

இதற்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகவில்லை. உலக அளவில் இந்த பாதிப்பு ஏற்பட்டதால், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad