அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை - News View

Breaking

Post Top Ad

Monday, March 8, 2021

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.

எதிர்காலத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தலைவர்களுடன் நிதி அமைச்சில் நேற்று (2021.03.08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார்.

வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்ளும்போது அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது குறித்து கவனத்திற்கொண்டு வெற்றிகரமான திட்டங்களை மாத்திரம் செயற்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய பிரதமர், அத்திட்டங்களின் ஊடாக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.

கடல் வள பல்கலைக்கழகத்திற்கான திட்டம் குறித்தும் இதன்போது பிரதமர் விசேட கவனம் செலுத்தினார். அப்பல்கலைக்கழக திட்டத்தை அதனை அண்மித்த பிரதேசங்களின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படுத்துமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த கலந்துரையாடலில், நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகர, கௌரவ பிரதமரின் நிதி அமைச்சின் ஒருங்கிணைப்பாளர்களான சரித் விஜேசிங்க, கெமுனு கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad