ஜனாதிபதி தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ஜோ பைடனை தோல்வியடைய செய்ய ரஷியா தலையீடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 17, 2021

ஜனாதிபதி தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ஜோ பைடனை தோல்வியடைய செய்ய ரஷியா தலையீடு

தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட 15 பக்க அறிக்கையில் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு பயன் அளிப்பதற்காக ரஷிய ஜனாதிபதி விளடிமிர் புதின் தேர்தலில் தலையீட்டை மேற்பார்வையிட்டார் அல்லது குறைந்த பட்சம் ஒப்புதல் அளித்தார் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். 

அப்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) தோல்வி அடைந்தார். ஆனால் தனது தோல்வியை ஏற்க மறுத்து தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது எதுவும் நிறைவேறவில்லை. 

இதையடுத்து கடந்த ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார்.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக முடிவுகளை கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புதின் முயற்சிகள் மேற்கொண்டார் என்று அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட 15 பக்க அறிக்கையில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு பயன் அளிப்பதற்காக ரஷிய ஜனாதிபதி புதின் தேர்தலில் தலையீட்டை மேற்பார்வையிட்டார் அல்லது குறைந்த பட்சம் ஒப்புதல் அளித்தார் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ரஷிய ஆதரவுடைய உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரிடெர்காக் போன்ற நபர்கள், ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகியோருக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடும் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு டிரம்பின் சட்டத்தரணி ரூடி கியுலியானியை ஆண்ட்ரி டெக்காக் சந்தித்தார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை காரணமாக ரஷியா மீது அமெரிக்கா அடுத்த வாரம் பொருளாதார தடைகள் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ பைடன் தனது பிரசாரத்தின் போது ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு உள்ளது என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment