தொழிற்சாலை கூரையிலிருந்து விழுந்து மூன்று பிளைகளின் தந்தை பலி - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

தொழிற்சாலை கூரையிலிருந்து விழுந்து மூன்று பிளைகளின் தந்தை பலி

தேயிலை தொழிற்சாலையின் உரம் கலஞ்சியசாலை கூரையிலிருந்து விழுந்த மூன்று பிளைகளின் தந்தை ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்ட தேயிலை தொழிற்சாலையின் உரம் கலஞ்சியசாலை கூரை திருத்தம் செய்து கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய சுப்பரணியம் அருணாசலம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துளார் .

இன்று (10) காலை 11.30 மணியளவில் கூரைத்திருத்தம் செய்து கொண்டிருந்தவர் கூரையிலிருந்து உரம் கலஞ்சியசாலைக்குள் வீழந்துள்ளார்.

நீண்ட நேரத்தின் பின்னர் தொழிற்சாலை காவலாளி கண்டு உடனடியாக டிக்கோயா கிளங்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் பிரதேச பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad