கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது முதலாவது அஸ்ட்ரா ஜெனெகா கொரோனா தடுப்பூசியை நேற்று வெள்ளிக்கிழமை போட்டுக் கொண்டார்.

"நான் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி முதல் அளவைப் பெற்றுள்ளேன். தடுப்பூசி மருந்தை போட உதவிய விஞ்ஞானிகள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி”

தடுப்பூசியை போட்டுக் கொள்வது நாம் இழக்கும் வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த விடயம். தடுப்பூசியை போட்டுக் கொள்வோம்" என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

போரிஸ் ஜோன்சன் தனது முதல் தடுப்பூசியை பெற்ற பின்னர் வெள்ளிக்கிழமை மாலை லண்டனின் சென் தோமஸ் வைத்தியசாலையில் உள்ள காசியட் ஹவுஸ் வெளிநோயாளர் நிலையத்திலிருந்து வெளியேறினார்.

கடந்த ஆண்டு, போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்ட் தோமஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், அஸ்ட்ரா ஜெனெகாவின் தடுப்பூசியை போடுவதாகக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad