‘தகுதியற்ற மத்தியஸ்தர்களை போட்டிக்கு அனுப்பாதீர்கள்” - சம்மேளனத்தை சாடுகிறார் ஜாவா லேன் பயிற்றுவிப்பாளர் ஜோர்ஜ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 30, 2021

‘தகுதியற்ற மத்தியஸ்தர்களை போட்டிக்கு அனுப்பாதீர்கள்” - சம்மேளனத்தை சாடுகிறார் ஜாவா லேன் பயிற்றுவிப்பாளர் ஜோர்ஜ்

சிற்றி புட்போல் லீக் ஜனாதிபதி கிண்ண போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில் தகுதியான மத்தியஸ்தர்கள் பணக்கார அணிகளின் போட்டிகளில் மட்டுமே ஈடுப்படுத்தப்படுகிறார்கள்.

ஏனைய போட்டிகளுக்கு பாடசாலை மட்டத்திலான மத்தியஸ்தர்களை இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் அனுப்புவதாக ஜாவா லேன் உதைபந்தாட்ட கழக பயிற்விப்பாளரான அந்தனி ஜோர்ஜ் கூறுகிறார்.

தங்களது அணிக்கும் சவூன்டர்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டி இதற்கு நல்ல உதாரணம் என்று சொல்லும் அவர் அந்த போட்டியின் 17வது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனல்டி மற்றம் தமது வீரருக்கு வழங்கிய ரெட் கார்ட் அனைத்துமே வேடிக்கையாக இருந்தது.

ரெட் கார்ட் வழங்கப்பட்ட வீரருக்கும் மத்தியஸ்தருக்கும் இடையில் போட்டி நடுவே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இது சர்வதேச போட்டிகளில் இயல்பாக நடைபெறும் நிகழ்வு .

இதற்காக ரெட் கார்ட் வழங்குவதா? மரபு பிரகாரம் முதலில் மஞ்சள் அட்டை வழங்க வேண்டும், இது கூட அறியாத மத்தியஸ்தர் என்று வேடிக்கையாக கூறினார்.

இவ்வாறு நிகழ்வதனால் எம்மை போன்ற வசதியற்ற கழகங்கள் அனுசரனையாளர்கள் இன்றி காணாமல் போய்விடும். நாம் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கழகத்தை வழி நடத்துகிறோம் .

அத்தோடு கொழும்பு புட் போல் கழகம் மற்றும் அப்கன்றி லயன் கழக போட்டிகளுக்கு சிறந்த மத்தியஸ்தர்களை அனுப்பும் போட்டி ஏற்பட்டாளர்கள் ஏன் ஏழை கழகங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது.

தயவுசெய்து இது குறித்து சம்மேளனம் கருத்தில் கொள்ள விடின் போட்டியின் நம்பக தன்மை கேள்விக்குறியாகும்.

குறிப்பாக இரசிகர்கள் போட்டிகளை கண்டுகளிக்க வரவேமாட்டார்கள் என ஜாவா லேன் அணியின் பயிற்றுவிப்பாளரான அகஸ்டின் ஜோர்ஜ் வேதனையோடு சொன்னார்.

மேலும் இந்த அணிக்கு உதவி செய்ய தனவந்தர்கள் விரும்பினால் அவரை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment