சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தோமஸ் பேச் மீண்டும் தெரிவானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தோமஸ் பேச் மீண்டும் தெரிவானார்

ஜேர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தோமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 67 வயதான தொமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஜேர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தோமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். 

ஒன்லைன் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தோமஸ் பேச், கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23ம் திகதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.

No comments:

Post a Comment