ஐந்தாவது நாளான இன்று ஓட்டமாவடி - மஜ்மா நகரில் ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

ஐந்தாவது நாளான இன்று ஓட்டமாவடி - மஜ்மா நகரில் ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்யும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமைகிழமையும் நடைபெற்றது.

ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்ற இன்று பிற்பகல் 04 மணி வரை ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

இதில் ஐந்து ஆண்களும், இரண்டு பெண்களது ஜனாஸாக்களுமாக ஏழு ஜனாஸாக்கள் இன்று செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இவர்கள் சாய்ந்தமருது, தர்ஹாடவுன், திருகோணமலை, வெள்ளவத்தை, மாவனல்லை பிரதேசத்தை சேர்ந்த தலா ஒரு ஜனாஸாவும், அக்குறனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு ஜனாஸாக்களும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொரோனா தொற்றால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கமைய ஐந்து நாட்களில் முப்பத்தெட்டு (38) ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad