ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே அனுமதி, இரணைதீவு தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே அனுமதி, இரணைதீவு தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம்

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார். இரணைதீவு தொடர்பில் சுகாதார அமைச்சு தொழிநுட்ப ரீதியாக ஆராயந்து தீர்மானமெடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இரணைதீவு பிரதேசத்தில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

எனவே இரணைதீவு தொடர்பில் சுகாதார அமைச்சினால் தொழிநுட்ப ரீதியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால், 'கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக' அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பையடுத்து எதிர்க்கட்சி உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினரால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோடு, இரணைதீவு மக்களால் எதிர்ப்பும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad