சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைதாகி பிணையில் விடுதலை - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைதாகி பிணையில் விடுதலை

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் ஒயாவிற்கு செல்லும் கிளை ஆறு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 09 பேரை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு இச்சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வட்டவளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 09 பேரும் கைது செய்யப்பட்டதோடு மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என வட்டவளை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு வட்டவளை பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad