மாத்தறையில் 68 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

மாத்தறையில் 68 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

மாத்தறை, தெய்சந்தர பகுதியில் 68 கிலோ கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று அதிகாலை தெய்சந்தர பொலிஸ் பிரிவில் - தெனகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்பேதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, கட்டான பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண்ணொருவரும், கண்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரும் ஆவர்.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இலங்கையின் தெற்கு பகுதி போதைப் பொருள் விநியோகத்திற்கான மையமாக மாறி வருவதை அவதானித்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad