தரவுகளின் படி உலகில் பெண்கள் ஒரு மணித்தியாலத்திக்குள் 6 பேரும், ஒரு நாளில் 136 பேரும் கொலை செய்யப்படுகின்றனர் - பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

தரவுகளின் படி உலகில் பெண்கள் ஒரு மணித்தியாலத்திக்குள் 6 பேரும், ஒரு நாளில் 136 பேரும் கொலை செய்யப்படுகின்றனர் - பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர்

(எம். என்.எம்.அப்ராஸ்)

உலகில் பெண்களுக்கு எந்த விடயத்திலும் சம உரிமை கிடைக்கின்றது என்பதை பற்றி ஆராய்ந்தால் குறைவாகத்தான் உள்ளது. உலகில் ஒரு மணித்தியாலத்திக்குள் 6 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர் ஒரு நாளில் 136 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர் மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் உலகில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தென்னாசிய நாடுகளில் 38 வீதமான பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என தரவுகள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட பீடாதிபதியும், பேராசிரியருமான ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார் .

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் "ஆளுமையுள்ள பெண் தலைமைகளை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வும், சாதனைப் பெண்கள் கெளரவிப்பும் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் தானிஷ் றஹ்மத்துள்ளாஹ் தலைமையில் சம்மாந்துறை தனியார் விடுதியில் கடந்த திங்களன்று (08) நடைபெற்றது.

இதில் விசேட பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் எமது நாட்டில் சனத் தொகை அடிப்படையில் 57 வீதமான பெண்கள் காணப்படுகின்றனர்.
தொழில் சந்தையில் சுமார் 85 லட்சம் பேர் தொழில் புரிகின்றனர். இதில் 33 வீதமனோர் பெண்களாவர். கல்வி மற்றும் அறிவு ரீதியில் பெண்கள் முன்னிலையில் உள்ளனர். தொழில் சந்தையில் பெண்களுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அவ்வாறு தொழில் செய்வோராக இருந்தாலும் அவர்களுக்கு மிக குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலிலே உள்ளனர் .

இலங்கை நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாய் பெண்கள் உள்ளனர். குறிப்பாக ஆடை உற்பத்தி, பெருந்தோட்டத்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்றவற்றை குறிப்பிடலாம்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் பெண்கள் காணப்பட்டாலும் அவர்களுக்கான சமுக அந்தஸ்த்து மிக குறைந்த அளவிலே உள்ளது இதற்கான காரணத்தை நோக்கினால் அவர்களை பற்றிய மதிப்பீடு சமுகத்தில் குறைவாகவே உள்ளது.

கல்வி, அரசியல், பொருளாதார ஏனைய துறைகளில் பெண்களின் வகிபாகம் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும் சமுகத்தின் நிலை மிக குறைவாக உள்ளது. ஆனால் இன்று பல துறைகளில் பெண்கள் மிக சிறந்த முறையில் பிரகாசிக்கின்றனர் .

மகளிர் தினத்தில் மட்டும் பெண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர்களாகும். இவர்களின் தியாகமும், வகிபாகமும் குடும்பத்திலும், சமுகத்திலும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதொன்றாகும்.

பெண்களை தைரியம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும் இதற்கான வலுவூட்டல்களை மேற்கொள்ள வேண்டும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை மேற்கொள்வது எமது கடமையாகும் என்றார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக ஜே.ஜே. பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகரும் கொலன்னாவ ஜும்மா பள்ளிவாசல் தலைவர் கலாநிதி ஐ. வை.எம்.ஹனிப் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை பொலில் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் டி .ஜனோசன், கல்முனை வலய உதவி கல்வி பணிப்பாளர் திருமதி நஸ்மியா சனுஸ், சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியால பிரதி அதிபர் திருமதி றிப்கா அன்சார், கிழக்கு இளைஞர் அமைப்பின் ஆலோசகரும் சமூக சேவையாளர் எஸ்.எல்.ஏ.நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்

மேலும் நிகழ்வின் விசேட அம்சமாக சாதனைப் பெண்களாக மிளிரும் பலர் கெளரவிக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad