யாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறை கொண்ட ஆபத்தான வெடி மருந்துகள் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Monday, March 8, 2021

யாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறை கொண்ட ஆபத்தான வெடி மருந்துகள் மீட்பு

யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறை கொண்ட ஆபத்தான வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் நேற்று அதிகாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதனை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரால் குறித்த வெடி மருந்துகள் மீட்கப்பட்டன.

3 கிலோ 750 கிராம் சி-4 மற்றும் ரி.என்.ரி. வெடி மருந்துகள் டெட்டனேற்றர்கள் அதற்கான வயர்கள் என்பன மீட்கப்பட்டன

குறித்த வெடி மருந்துகள் அனைத்தும் தற்போது நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad