43 வயதான கம்பீரமான ‘ரேவதா’ யானை உயிரிழந்தது - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

43 வயதான கம்பீரமான ‘ரேவதா’ யானை உயிரிழந்தது

கலா வாவிற்கும் பலலு வாவிற்கும் இடையிலான பள்ளத்தாக்கில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த ‘ரேவதா’ என்ற கம்பீரமான யானை நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சேனை பயிர்ச் செய்கையை பாதுகாப்பதற்காக முறையற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய பின்னர் அந்த யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த அப்பாவி யானையின் தீடீர் மரணம் குறித்து அதிகாரிகள் பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

43 வயதான ரேவதா யானை மன்னர் மந்தையின் மிகப்பெரிய யானை, இது கலா வாவியின் அழகை மேலும் அதிகரித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad